தென்மாவட்டத்தை சேர்ந்த இரு தொழில் குடும்பங்களின் தொழில் முறை மற்றும் பாரம்பரியம் , வாழ்க்கை முறைகள் பற்றி நாவல் சொல்கிறது.
மனதிற்குள் அன்பையும், காதலையும் சுமந்து கொண்டு வெளிக்காட்டத் தெரியாமல் தவித்திருக்கும் கணவன் - மனைவியின் நிலைமை, கல்லூரி காலத்திற்கு பிறகு தொடர முடியாமல் போன ஆண் - பெண் நட்பு , உறவுகளுக்கிடையேயான முட்டல், மோதல்கள், சொல்ல முடியாமல் மனதிற்குள் சுமந்து கொண்டிருந்த காதல் என பல்வேறுபட்ட மக்கள் நாவலில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றனர்.