Share this book with your friends

En Thedal / என் தேடல் My Search

Author Name: Sajeesh Radhakrishnan (aka) Mazhaikadhalan | Format: Hardcover | Genre : Poetry | Other Details

என் தேடல்

சில தருணங்கள் கடந்து போகும், சில கரையாது நம்மை நிறுத்தும்.

அந்த நிறுத்தத்தின் ஒரு பதிவு, புகைப்படங்கள்.

ஆனால் உணர்ந்ததை பகிர வார்த்தைகள் வேண்டுமாயிற்று.

 

இந்த “என் தேடல்”, அந்த இரண்டையும் ஒன்று சேர்க்கும் ஒரு முயற்சி.

இங்கே உள்ள ஒவ்வொரு கவிதையும் உரையாடல்களில் பிறந்தவை;

காற்றோடு, அலையோடு, ஒரு பார்வையின் மௌனத்தோடு, ஒரு நினைவின்

சிலிர்ப்போடு.

 

சில கவிதைகளில் அர்த்தங்கள் காணலாம்.

சில கவிதைகளில் தேடலின் அழகை உணரலாம்.

 

இந்த தொகுப்பு,

என் பயணத்தின் துணுக்குகள்.

தேடலின் விடைகளல்ல,

சக பயணியாய் பயணிக்க

ஒரு அழைப்பிதழ்.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 1349

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சஜீஷ் ராதாகிருஷ்ணன் (எ) மழைக்காதலன்

மழைக்காதலன் (சஜீஷ் ராதாகிருஷ்ணன்) கவிஞரும் புகைப்படக் கலைஞரும்.புகைப்படம் அவருக்கு ஒரு காட்சி மட்டும் அல்ல, உணர்வு. 2011- இல் தொடங்கிய இந்த பயணம், மனதில் எழும் அசைவுகளை படங்களிலும் கவிதைகளிலும் பிடித்து வைத்திருக்கிறது. சிறு வயதிலிருந்தே எழுதத் தொடங்கிய சஜீஷ், இப்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.

உணர்ச்சி ஆழம் கலந்து, "மினிமலிசம்" சார்ந்த கருப்பு வெள்ளை புகைப்படங்களில் பல்வேறு சர்வதேச பாராட்டுகளையும் பரிந்துரைகளையும் பெற்றுள்ளார். International Photography Awards, Spider Awards போன்ற உலகப் புகழ் பெற்ற விருதுகளில் இடம்பெற்றுள்ளார்; மேலும் Sanctuary Asia மாத இதழில் அவரின் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

2023-இல் வெளியான அவரது “மழை காதல் காமம்” கவிதைத் தொகுப்பு, ஏக்கம், நெருக்கம், அமைதியின் இடைவெளிகள் ஆகியவற்றை நுணுக்கமாக சித்தரித்தது.அவரது படைைப்புகள் மற்றும் சிந்தனைகள் சந்திக்கும் பயணம்: sajeeshradhakrishnan.com

மழைக்காதலனுக்கு கலை என்பது ஒரு தனிப்பட்ட தேடல். ஆன்மாவை அசைக்கும் நொடியை வடிவம் கொடுக்க முயலும் அவசரமற்ற பயணம். சொற்களிலும் படங்களிலும், உலகத்துடனும் தன்னுடனும் பேசும் உரையாடல். வாசகர்களை நிறுத்தி, காணவும் உணரவும் எத்தனிக்கும் அந்த உரையாடல்களின் தொகுப்பு இந்த புத்தகம்.

Read More...

Achievements