கடைசியாக அவன் வீட்டை கண்டே பிடித்துவிட்டேன்
வீடெங்கும் விரவிக் கிடக்கிறது பர்மிய குழந்தைகளின் ஓலம்
நீண்ட தாழ்வாரத்தில் கிடக்கிறார்கள் ராணுவ டாங்கிகள் நசுக்கிய சீனத்து மாணவர்கள்
காதுகளில் சீழ் வடிய, பாலைநிலத்தின் பெரு வெப்பம் சூழ்ந்து,
பூளை தள்ளும் கண்களோடு, பெரு வயிற்றை நீவி அமர்ந்திருக்கிறார் புத்தர்
நெருங்கி அணைக்கையில், தலை முடிகளில் நெளியும் புழுக்கள்
கதைத்து திரும்புகையில், பற்றும் அவர் கரங்களில்
வழிகிறது முள்ளி வாய்க்கால் பெருங்குருதி.
அடுத்த முறை சந்திக்கையில் பேதிக்கை ஒன்றை அவருக்கு பரிசளிக்க வேண்டும்