சரஸ்வதி, இந்து தம்பதிகளான ராஜகோபால் மற்றும் ருக்மணி அவர்களின் ஒன்பதாவது மகளாகப் பிறந்து, தனது வாழ்க்கையின் ஆரம்பகாலத்தை கல்வித்துறைக்கு அர்ப்பணித்து, ஒரு ஆசிரியையாகப் பணியாற்றினார். கல்வித்துறையில் பணியாற்றும் ஜோசப் அவர்களை திருமணம் செய்தார். இயேசுவின் மீது கொண்ட நேசித்தினால் எழுந்த ஆர்வத்தினாலும், ஊழியப் பணிக்கான தன் அழைப்பினாலும் முழுமையாக பின்தொடர்வதற்காக, பின்னர் தன்னார்வ ஓய்வைத் தேர்ந்தெடுத்தார்.
வரலாறு, கலாசாரம் மற்றும் விசுவாசம் ஆகியவற்றில் அவருக்கிருந்த ஆழ்ந்த விருப்பமே, எழுத்துலகிற்குச் சென்ற பாதையாக அமைந்தது. அவர் எழுதிய முதல் நூல் “குமரிக் கண்டம்”, 2,500 ஆண்டு சமய மரபில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இந்து வாசகர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. அவரது இரண்டாவது படைப்பு “வேளர் வேந்தன்”, சோழர்களின் வம்ச வரலாறும், அவர்களின் சிறப்பும் பற்றிய விரிவான ஆய்வாகும். தொடர்ந்து, எழுதிய மூன்றாவது (இந்தியர் எனும் இஸ்ரவேளர்) மற்றும் நான்காவது (சைவமும் கிறிஸ்தவமும்) நூல்கள், வேதாகமப் பாத்திரங்களைத் தமிழ் மற்றும் சங்க இலக்கியம் மற்றும் புராணங்களில் காணப்படும் பாத்திரங்களுடன் ஒப்பிட்டு, ஆன்மீக பாரம்பரியங்களையும், பண்பாட்டு வரலாறையும் இணைக்கும் ஒரு புதிய அணுகுமுறையை வாசகர்களுக்கு வழங்குகின்றன.
Youtube: North Israelite
Website: northisraelite.com
Mail id: madonna.sar98@gmail.com/ sarahmady67@gmail.com