Share this book with your friends

The Book of Jasher in Tamil / யாசேரின் ஆகமம் உபதேசத்திற்காக பயன்படுத்தக் கூடாது; ஆராய்ச்சிக்காக மட்டும்!

Author Name: Yesudas Solomon | Format: Hardcover | Genre : Religion & Spirituality | Other Details

இந்தப் புத்தகம் வேதாகமப் போதனைகளுக்காகவோ அல்லது வேதாகம உபதேசமாகவோ பின்பற்றப்படக் கூடாது என்பதை நான் வெளிப்படையாகவும் தாழ்மையாகவும் கூற விரும்புகிறேன். இது விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு மோசஸ் சாமுவேலின் (Moses Samuel) ஆங்கிலப் பதிப்பைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு தலைசிறந்தது என்று பல எபிரெய மொழி வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களில் சிலர்: ரபி எச். வி. நாதன் (Rabbi H. V. Nathan), பேராசிரியர் சாமுவேல் எச். டர்னர் (Professor Samuel H. Turner), பேராசிரியர் ஜார்ஜ் புஷ் (Professor George Bush), பேராசிரியர் ஐசக் நார்ட்ஹெய்மர் (Professor Isaac Nordheimer).

இதன் மூல உரையானது வேதாகம மரபுத்தொடர்களின் கலவையுடன் "ரபிமார்களின் எபிரெய" (Rabbinical Hebrew) மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று பேராசிரியர் டர்னரும், பேராசிரியர் புஷ்சும் குறிப்பாகச் சுட்டிக்காட்டினர்.

மூல எபிரெயப் புத்தகத்தின் பெயர் செஃபர் ஹாயாஷார் (Sefer haYashar / ספר הישר). இது "நேர்மையானவரின் புஸ்தகம்" அல்லது "யாசேரின் புஸ்தகம்" என மொழிபெயர்க்கப்படுகிறது.வேதாகமத்தில் யோசுவா 10:13 மற்றும் 2 சாமுவேல் 1:18 ஆகிய இரண்டு இடங்களில் இந்தப் புத்தகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மூல எபிரெயப் புத்தகத்தின் ஆசிரியர் இன்னும் அடையாளம் தெரியாத நபராகவே உள்ளார்.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 750

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஏசுதாஸ் சாலொமோன்

ஏசுதாஸ் சாலொமோன் அவர்கள் 'தேவனுடைய வார்த்தை குழுவின்' / Word of God Team (www.WordOfGod.in) தலைவராகப் பணியாற்றுகிறார். இந்தியாவில் ஊடக ஊழியத்தை (Media Ministry) முதன்முதலில் தொடங்கியவரும், பல்வேறு ஊடக ஊழியங்களில் அநேகருக்குப் பயிற்சி அளித்த முதல் நபரும் இவரே ஆவார். பழங்குடி மக்களிடையேயும் ஊடகப் பணிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை இவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

பழமையான தமிழ் கிறிஸ்தவ ஆவிக்குரிய புத்தகங்கள், வேதாகமங்கள் மற்றும் அகராதிகள் என சுமார் 15,000 நூல்களைச் சேகரித்து ஸ்கேன் (Scan) செய்துள்ளார். இந்த அரிய பொக்கிஷங்களை www.WordOfGod.in மற்றும் www.Archive.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக மக்கள் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் வழங்கி வருகிறார்.

இவர் மூன்று பல்கலைக்கழகங்களில் பயின்று 2 இளங்கலைப் பட்டங்கள், 2 முதுகலைப் பட்டங்கள் மற்றும் ஒரு முனைவர் (Doctorate) பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ஆயினும், தேவனுடைய ஞானத்திற்கும் அறிவிற்கும் முன்பாக உலகத்தின் பட்டங்கள் எவ்வித மேன்மையுமற்றவை என்பதை உணர்ந்து, கிறிஸ்துவுக்காகத் தமது பெயருக்குப் பின்னால் உள்ள பட்டங்கள் அனைத்தையும் துறந்துவிட்டார்.

தற்போது வெளியாகும் இந்தப் புத்தகம் இவர் வெளியிடும் 195-வது நூலாகும்.

Read More...

Achievements

+5 more
View All