Share this book with your friends

The Glory of the Great Goddess in Lalithā Sahasranāmam / ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் லோகமாதாவின் மாஹாத்மியம்

Author Name: Subi Subramaniam | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

லலிதா ஸஹஸ்ரநாமம், ஜகன்மாதா ஸ்ரீ லலிதாதேவியின் ஆயிரம் திருநாமங்களின் தொகுப்பு. தெய்வீகமான இதனை, அன்னையே நியமித்த வாக்தேவியர் பாடியுள்ளனர். எனவே தெய்வமே நமக்கு அளித்துள்ள தெய்வீகத் திரட்டு என்னும் தனிச்சிறப்புப் பெற்றுள்ளது. 

அமெரிக்காவில் டெட்ராய்ட் (மிச்சிகன்) நகருக்கு அருகில் அமைந்துள்ள சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளைக்காக (SVBF North, USA) ஸ்ரீ ஸுபி ஸுப்ரமண்யன் அவர்கள் நிகழ்த்திய தொடர் விரிவுரைகளின் ஆங்கிலத் தொகுப்பை முன்பு உவப்புடன் வழங்கினோம். இந்தத் தொகுப்பு, அவ்  விரிவுரைகளின் சிறப்பு அம்சங்களைத் தமிழில் வழங்குகிறது. 

 லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஒப்பற்ற விளக்கவுரை எழுதியுள்ள ஸ்ரீ  பாஸ்கரராயரின் அரிய விளக்கங்களைத் துணையாகக் கொண்டு, வடமொழியில் அமைந்துள்ள திருப்பெயர்களைப் பதம் பிரித்து அவற்றுக்கான அர்த்தங்களைப் பொருத்தமான மேற்கோள்களுடன் அறுவர் இணைந்து ஒப்பனை செய்து உள்ளனர். ‘ஸஹஸ்ரநாமத்தைப் பொருளுணர்ந்து ஓதுவது தான் பொருத்தம்’ என்பர் சான்றோர். அவ்வகையில், ஒவ்வொரு நாமாவும் மந்திரமாகத் திகழும் இந்த நாமாவளி, பொருட்செறிவுடன் அழகு தமிழில் பொலிகிறது. ‘இதுவே அதுவாய், அதுவே இதுவாய், எதுவும் அதுவாய்-’ இருக்கும் பரம்பொருளின் பேரருள், இச்சிறு நூலிலிருந்தும் வெளிப்படும் என்பது உறுதி. ஆன்மிக வளர்ச்சியை நாடுபவர்களுக்கு, இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதமாகும்.  

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 780

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸுபி ஸுப்ரமண்யன்

ஸுபி ஸுப்ரமண்யன் ஆற்றல் இயலையும் சுற்றுச்சூழல் இயலையும் தமது வாழ்க்கைப் பணியாகக் கொண்டவர். பன்னாட்டுக் கூட்டுரிமைக் குழுக்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் பல்வேறு கூறுகளில் பரந்த அனுபவம் பெற்றவர். பாரம்பரியச் சிறப்பாலும் பெரியோர்கள் தொடர்பாலும் பல துறைகளில்- குறிப்பாக, ஆன்மிகத்தில் பேரார்வம் கொண்டவர். வடமொழியில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், அரிய கிரந்தங்களைப் பலருக்குக் கற்பிப்பதில் பெரு நிறைவைக் காண்கிறார்.

 

Read More...

Achievements

+2 more
View All