You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமுன்னதாக பாமரனுக்கான பாதுகாப்பு சட்டங்கள் என்கிற பெயரில் சட்டம் தொடர்பான ஒரு புத்தகம் எழுதி இருந்தேன், அதற்கடுத்ததாக மறைக்கப்பட்ட இந்தியாவின் மறுபக்கம் என்கிற வரலாற்று தரவுகளுடன் கூடிய ஒரு ஆய்வு புத்தகம் எழுதி வெளியிட்டேன். தற்போது, இன்றைய காலகட்டத்தில் வெளியான புதிய தீர்ப்புகள், மற்றும் புதிய சட்டங்களின் அடிப்படையில் இப்புத்தகத்தினை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
நம் நாட்டின் ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் முக்கிய நான்கு தூண்களான, சட்டமியற்றும் மன்றம், நீதித்துறை, நிர்வாகத் துறை, பத்திரிகை துறை இன்றும் பழுதடையாமல் ஜனநாயகத்தை நாளும் வளர்ச்சியடைய செய்து, முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
சட்டமியற்றும் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் போதும், நீதியை நிலைநாட்டும் எண்ணம் கொண்டோர் நீதிமன்றத்தில் தீர்ப்புகளைப் பகரும் போதும், நேர்மையான நிர்வாகிகள் நிர்வாகம் செய்யும் போதும், உண்மையின் ஊற்றுக் கண்களாக இருந்து, சமூக அக்கறை உள்ளவர்கள் பத்திரிகை துறையிலிருந்து, மக்களின் மனசாட்சியாக இருக்கும் போதும் ஜனநாயகம் என்றும் நெறிபிறழாது செழித்தோங்கும் என்பது வரலாறு காட்டும் உண்மை.
நீதித்துறை, குரலற்றவர்களின் குரலாக விளங்கி, வழங்கும் தீர்ப்புகளிலிருந்து, நாட்டின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும், கொள்கைப் பிடிப்புகளுக்கும், ஏழை, எளிய மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, அவர்களின் வாழ்க்கையில் கிஞ்சித்தும் பாதிப்பு வராமல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில், நெறி பிறழாமல் தீர்ப்புகளை வழங்கி நம் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து வருகிறது,
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
ராசா துரியன் - வழக்கறிஞர், karpagam dhuriyan
ராஜாராம் சாந்தி தம்பதியினருக்கு மகனாக பிறந்து வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றேன். கடந்த காலங்களில் சினிமாவில் உதவி இயக்குனராக, இளம் குரல் என்கிற இதழில் இணை ஆசிரியராக பணிபுரிந்தேன். என்னுடைய எண்ணம், தேடல் அனைத்தும் நம் தேசத்தின் மீதிருந்த காதலால் இப்புத்தகத்தை எழுத வைத்தது.காதல் திருமணம் ஆன பின்னர், என்னுடைய மனைவியே என்னுடைய ஒரே நம்பிக்கையும் ஆதரவுமாகி இருந்தால், எனக்கான உத்வேகமும் அவளே.
பெற்றோரும் உற்றோரும் கைவிட்ட நிலையில், நண்பர்களின் உதவியோடு சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அதற்கு வாடகை கொடுப்பதற்கே கஷ்ட்டப்பட்ட காலங்களில், சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல், பல இரவுகளில் ஈரத்துணியோடு படுத்து உறங்கிய நாட்கள் அதிகம். கொரோனா காலகட்டம் அது, வேலையும் இல்லாமல் இருந்து, அதன் பிறகு அந்நாட்களில் உணவு டெலிவரி வேலைக்கு சென்று இரவு முழுவதும் பல கிலோமீட்டர்கள் வண்டி ஓட்டி உணவு டெலிவரி செய்தால் அதில் கிடைக்கும் கேஷ் ஆன் டெலிவரி பணத்தில் அடுத்த நாளிற்கான உணவை தேடிக்கொள்வோம்.
இந்தியன் வங்கியில் வழக்கறிஞராக ஆன பின்னரும் ஒரு வருடம் நான் உணவு டெலிவரி வேலையை விட முடியவில்லை, காரணம் சொற்ப வழக்குகளே வரும், சில மேலாளர்கள் என்னை சிறுவன் என்று மதிக்க கூட மாட்டார்கள், உட்காரகூட சொல்லமாட்டார்கள், போட்டுக்கொள்ள நல்ல சட்டை கூட இருக்காதா காலகட்டம் அது.
அந்த சமயத்தில் சரவணா ஸ்டோர்ஸ் என்கிற மிகப்பெரிய நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ஒன்றினை ஏற்கனவே பல வழக்கறிஞர்கள் பயந்து ஒதுங்கிய வழக்கினை எனக்கு அளித்தார்கள், உயர் அதிகாரிகள் இவன் சிறுவன் இவனுக்கு வேண்டாம் என்று எச்சரித்த பிறகும் என் அம்மா சிந்தியா அவர்கள் மேற்படி வழக்கினை எனக்கு கொடுத்தார்கள், அதில் கடந்த 4 வருடமாக பெண்டிங்கில் இருந்த வழக்கினை என்னிடம் வந்த ஒரே மாதத்தில் உத்தரவு பெற்று மேற்படி சொத்தினை ஜப்தி செய்தேன். அந்த இன்டெர்வியு இன்றும் பல செய்தி சேனல்களின் Youtube இல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு பல்வேறு பெரிய பெரிய வழக்குகளை இதுநாள்வரை தமிழகம் மட்டும் இன்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நாம் நடத்தி வருவது பெருமைக்குரிய விஷயம்.
Highlight Cases:-
Indian Bank vs Saravana Stores
Indian Bank vs Nakheeran Publications
Indian Bank vs PRIST University (Mamallapuram,Pondicherry,Sivagangai,Nagarcoil)
Indian bank vs Indian Institute of Logistics (Tamilnadu and Kerala)
IDBI vs Vasan Eye Care
IDBI vs Vee Care
Co-Operative Bank vs Hotel Saravana Bhavan
IOB- PERI Engineering College
இன்றைய தினம் இந்தியன் வங்கி மட்டும் இல்லாமல், Indian Bank, Canara Bank, Karnataka Bank, Bank of Maharashtra, Indian Overseas Bank, Jana Small Finance B
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.