நம்பிக்கையுடன் சாதித்து வாழ அனைவரையும் ஊக்குவிக்கும் புத்தகம் 'வாழ்வின் பாதை நம்பிக்கை'. பல சாதனையாளர்களின் முயற்சியால் தான் இன்று நாம் பல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறோம். நூலாசிரியர் சிவசக்தி எழுதியுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் அதை நமக்கு நினைவுப்படுத்தும். எட்டிவிடும் தூரத்தில்தான் வெற்றி. ஆனால், அதற்கு மிகவும் அவசியமான ஒன்று முயற்சியும், பயிற்சியும்தான்! இந்த நூல் உங்களை நிச்சயம் சாதிக்கத் தூண்டும். இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.