Share this book with your friends

"Yahweh Ra'ah" My Good Shepherd / "யெகோவா ராஹ்” எந்தன் நல்ல மேய்ப்பர் இருபத்தி மூன்றாம் சங்கீதத்தின் வெளிப்பாடுகள்/Revelations from Psalm 23

Author Name: Dr. Shilpa Germaine Alfred | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

சங்கீத புத்தகம் தெய்வீக ஞானத்தின் ஒரு கடல், அதில் பெரும்பகுதி "தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன் " என்று அழைக்கப்பட்ட ராஜாவாகிய தாவீதால் எழுதப்பட்டது. தேவனால் நியமிக்கப்பட்ட இந்த தனித்துவமான பெயர் தாவீது பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே தீர்க்கதரிசியாகிய சாமுவேலால் அறிவிக்கப்பட்டது என்பதும், அவன் அதை உண்மையில் தன் சொந்த காதுகளால் ஒருபோதும் கேட்டதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இந்த மர்மமான தலைப்பு, மேய்ப்பன் ராஜாவின் வாழ்க்கை மற்றும் இலக்கியப் படைப்புகளில் ஆழமாக மூழ்கி, தேவனுடனான தங்கள் உறவை மேம்படுத்தவும் ஆழப்படுத்தவும் பலரை ஆர்வப்படுத்தியுள்ளது. தாவீதின் வாழ்க்கை கோலியாத்திற்கு எதிரான அற்புதமான வெற்றி மற்றும் பத்சேபாள் மற்றும் உரியாவுடனான பேரழிவு தரும் வெட்கக்கேடான தொடர்புகளையும் விட மிகவும் முக்கியமானது.

இந்தப் புத்தகம் ஆசிரியரின் அசல் ஆங்கிலப் புத்தகமான "சங்கீதங்களின் சாரம்: பகுதி 1" -இல் இருந்து  எடுக்கப்பட்ட ஒரு பகுதி மட்டுமே, இது மொத்தம் பன்னிரண்டு சங்கீதங்களிலிருந்து  மூன்று  வருட காலப்பகுதியில் எழுதப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆய்வாகும்.  இது நமது அன்றாட வாழ்வில் சங்கீதங்களின் உள்ளுயிர்த்துடிப்பையும் காலத்தால் அழியாத அனுபவத்தையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தாவீதின் வாழ்க்கையின் சிக்கலான விவரங்கள், தேவனை அவன் தொடர்ந்து சார்ந்திருப்பதையும், அவனது வெற்றிகள் அல்லது தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தன்னை சிருஷ்டித்தவரிடம் அவன் கொண்டிருந்த விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறது. இது சிலருக்கு முதன் முறையாகத் தகவல் தரும் வாசிப்பாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே தியானித்தவர்களுக்குக் கூடுதல் அறிவாக இருக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள்! தேவன் ஆசீர்வதிப்பாராக!

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாக்டர். ஷில்பா ஜெர்மைன் ஆல்ஃபிரெட்

தொழிலளவில், ஷில்பா ஒரு மருத்துவர். பெரு நிறுவனத்தில்  வேலை மற்றும் நல்ல சம்பளத்தை விட வாழ்க்கையில் இன்னும் அதிகம் இருக்கிறது என்பதைத் தேவனுடைய நற்குணமும் இரக்கமும் அவர்களை உணர வைத்தது. புற்றுநோயியல் துறையில் (அதன் அனைத்து உணர்ச்சி துயரங்களையும் கண்ணராக் கண்டு) ஐந்து வருடங்கள் செலவழித்து, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்ட அவர், "தேவனுடைய வார்த்தையையே" தனது இறுதி ஆறுதலாகக் கண்டார். அவருக்கும், அவருடைய கணவர் மருத்துவர் ஆல்ஃபிரட் அவர்களுக்கும், இரண்டு அழகான தேவபக்தியுள்ள பிள்ளைகளைத் தேவன் கிருபையாக கொடுத்திருக்கிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் தேவனுடைய வார்த்தையைத் தீவிரமாக ஆராய்ந்தறியும் மாணவியாக  இருந்து வருகிறார். இது அவரது முதல் தமிழ் வெளியீடு, மேலும்  "சிறிய தொடக்கங்களின் நாளை ஒருபோதும் இகழக்கூடாது" என்று அவர் உறுதியாக நம்புகிறார்!   

Read More...

Achievements

+3 more
View All