Share this book with your friends

117-New Carnatic Music Ragas / 117-புதிய கர்னாடக இசை ராகங்கள்

Author Name: Y.P.சிவா | Format: Hardcover | Genre : Music & Entertainment | Other Details

இசை 7 முழு ஸ்வரங்களால் ஆனதா?

இசை என்பது 7 முழு ஸ்வரங்களால் ஆனது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் அதில் ஓரளவுக்குத் தான் உண்மை இருக்கிறது. சில முழு ஸ்வரங்களை கோமள ஸ்வரம், தீவிர ஸ்வரம் என மேலும் இரண்டாக பகுப்பதால் 12 ஸ்வரங்கள் வருகின்றன. மேற்கத்திய இசையில் இவை Flat, Natural, Sharp என அழைக்கப்படும். இவை ஒன்றுக்கொன்று அரை ஸ்வரம் அளவுக்கு சத்தத்தில் மாறுபடும்.  

இந்த 12 ஸ்வரங்கள் கொண்ட அமைப்பு ஒரு ஸ்தாயி என்று கர்னாடக சங்கீதத்திலும் ஒரு Octave என்று மேற்கத்திய இசையிலும் அழைக்கப்படுகிறது. இந்த 12 அரை ஸ்வரங்கள் தான் ஆர்மோனியத்திலும் எலெக்ட்ரானிக் கீ போர்டிலும் கருப்பு, வெள்ளை கட்டைகளாக கொடுக்கப் பட்டுள்ளன.

இந்த 12 ஸ்வரங்களில் 7 ஸ்வரங்களை மட்டும் தேர்வு செய்வதால் வருவது தான் 7 ஸ்வரங்களை கொண்ட ஒரு முழு ராகம். விவாதி (சேர்ந்தால் போல் 3 அல்லது 4 ஸ்வரங்கள் வருவது) இல்லாமல் முழு ஸ்வரமும் அரை ஸ்வரமும் 7 ஸ்வரங்கள் வருவது போல் ராகங்களை தேர்வு செய்வது தான் இனிமையான இசையை தரும். இப்படி 7 ஸ்வரங்களை கொண்ட ஒரு முழு ராகம் மேளகர்த்தா அல்லது தாய் ராகம் என அழைக்கப்படும். இப்படி 117 புதிய மேளகர்த்தா ராக அமைப்பை கொண்டது தான் இந்த "117-புதிய கர்னாடக இசை ராகங்கள்" எனும் இந்த நூல்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

Y.P.சிவா

Y.P. Siva அவர்கள் தொழிலால் இயந்திரவியல் பொறியாளர்; மனதினால் இசை ஆர்வலர். கர்னாடக இசையின் கோட்பாடுகள், ஸ்வர அமைப்புகள், ராகங்களின் கட்டமைப்பு போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர், “117-புதிய கர்னாடக இசை ராகங்கள்” என்ற நூலின் ஆசிரியர். இசையின் நுட்பமான கருத்துக்களை வாசகர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இவர் எழுத்துப் பணிகளை மேற்கொள்கிறார். பாரம்பரியத்தின் அடித்தளத்தை மதித்து, இசை அறிவை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்து வழங்குவதில் இவர் பெரும் ஆர்வம் கொண்டவர்.

Read More...

Achievements