பேசும் புத்தகம் எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கருத்தாழமிக்க இறையியலை அள்ளித்தரும் அருளுரைகள் இடம் பெறுகின்றன. தலைப்பு மற்றும் கருப்பொருள் சார்ந்த அருளுரைகளும், சிறப்பு நாட்களுக்குரிய அருளுரைகளும், லெந்துகால வெள்ளிக்கிழமை மாலை தியானங்களும், கிறிஸ்து இயேசு மொழிந்த ஏழு சிலுவை மொழிகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. இந்த புத்தகம் சமூகநீதியைப் புரிந்துகொள்ளவும் கிறிஸ்துவின் சீடர்களாய் சான்று பகிரவும் நம் உள்ளுணர்வை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் அருளுரைகளை உள்ளடக்கியிருக்கும் ஒருநூல். எக்காலத்தும் பேசிக் கொண்டேயிக்கும் ஒரு புத்தகம் ஆகும். இயேசு கிறிஸ்துவை தெய்வீக நிலையில் மட்டும் புரிந்து கொள்ளாமல் சமூக செயற்பாட்டாளராக புரிந்து கொள்ளவும், இறையரசு வளர்ந்து அமைதியும் அன்பும் நிலை நாட்டப்படுவதற்கு, நம்மை கருவிளாக அர்ப்பணிக்கத் தூண்டும் அருட்செய்திகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. திருச்சபை ஆயர்களுக்கும், அருளுரைஞர்களுக்கும் உதவும் சிறப்பான கையேடு எனலாம்.