 
                        
                        கலிபோர்னியா காதலி -
கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோவில் ஜாகீரும் செங்குட்டவனும் ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அதுவும்தவிர அந்த நகரத்திலேயே இருவரும் ஒரே அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள்.ஒருநாள் காதலர் தினத்தன்று தன் காதலி லூசியைக் காணச் செல்கிறான்,ஜாகீர். அப்போது அவனது அலைபேசி ஒலிக்கிறது.மறுமுனையில் காதலியின் குரல். அந்த அழைப்பிற்குபின் நடப்பவை எல்லாம் அவன் கை மீறி போகிறது. வீபரீதம் ஒன்றில் சிக்குகிறான்.இதுகுறித்து போலீஸ் தன் விசாரணையை ஆரம்பிக்கிறது. அவனுடன் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே பிரச்சனைகளில் சிக்குகிறார்கள். அதனூடே, அந்த நகரத்தில் தொடர் கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. பிரச்சனையின் மையம் அறியாது திகைக்கின்றனர் சான் பிரான்ஸிஸ்கோ போலீஸ் அதிகாரிகள்.
மறு பக்கம், சான் பிரான்ஸிஸ்கோ நகரை சேர்ந்த மார்ட்டின் சாம்ஸ் குடிபோதையில் கார் ஓட்டியதற்காக போலீஸ் அதிகாரி பால் ஹாரிஸிடம் பிடிபடுகிறான்.அவர்,அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கிறான் மார்ட்டின் சாம்ஸ்.அதனால் சந்தேகத்தின்பேரில் அவன் காரை சோதனையிடுகிறார். அவருக்கு அதில் ஒரு விபரீதம் காத்திருப்பதை அறியாமல். பின்னர் நடக்கும் விஷயங்கள் எல்லாம் திகிலைக் கூட்டுகிறன.
இந்த இரண்டு கிளைக் கதைகளும் ஒன்றிணைந்து சான் பிரான்ஸிஸ்கோவில் நடக்கும் குற்ற பின்னணிகளை அதிர்வுடன் விவரிக்கிறது.
ஹாங்காங் விழிகள்
இரண்டு கிளை கதை.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வைதேகி. தன் கல்யாணச் செலவுகளுக்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் வீடு பறி போகும் அபாயம்… அந்த கஷ்டத்தில் மீள்வதற்கு ஒரு வாய்ப்பு அவளைத் தேடி வருகிறது! ஹாங்காங் சென்று அங்கு ஒருவரிடமிருந்து ஹாங்காங் விழிகளை பெற்று வர விமானத்தில் பறக்கிறாள். ஆபத்தில்லா பயணம் என நினைத்து பயணக்கிறாள் வைதேகி ஆனால் அழகான ஹாங்காங்கில் திடுக்கிடும் ஆபத்துக்களை அவள் சந்திக்க நேரிடுகிறது...! ஹாங்காங் விழிகள் என்றால் என்ன? சொன்னபடி அவற்றுடன் சென்னை வந்தாளா வைதேகி…?
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners