தேசபக்தியும், மனிதநேயமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மனிதநேயம் நாடு, சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளை கடந்தது. காதல் இல்லாமல் மனித சமுதாயம் இருந்திக்க இயலாது. இது ஒரு தொடர் கதை. உண்மையான காதல் பிரிவதில்லை என்ற நாவலில் நடுவில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ள இந்த தொடர்கதை, அந்த நாவல் போலவே காதல், சமூக பொறுப்பு, தேசபக்தி, மனிதநேயம் என்று பல பரிணாமங்களில் பயணிக்கிறது.
இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு சகோதர நாடுகளுக்கு இடையே காஷ்மீர் எல்லைப் பிரச்சனை என்றும் ஓயாது ஊடகங்களில் ஓதிக்கொண்டிருப்பது கடந்த காலம் முதல் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் நாம் ஏன் எல்லைகளைக் கடந்து அன்பின் சன்னிதானத்தில் சகோதரர்களாக வாழக் கூடாது? என்று என் மனதில் உதித்த கேள்வி தான் இந்த தொடர் கதை உருவாக காரணமாக அமைந்தது. இந்தியா, பாக்கிஸ்தான் இடையே பிரச்சனை மறைந்து எப்போதும் ஒற்றுமையாக சகோதர நாடுகளாக இருப்பது சாத்தியம் தானா? கதைகளுக்கு, கற்பனைகளுக்கு அது மிக எளிதில் சாத்தியமாகும் விடயம் தான். நனவில் சாத்தியமாக வேண்டுமெனில் அன்பு வார்த்தை அளவில் இல்லாமல், செயல் வடிவம் பெற வேண்டியது அவசியம்.
துப்பாக்கியால் எப்படி சுட்டுக் கொல்வது, ஏவுகணையால் இலக்கை எப்படி தாக்கி அழிப்பது, என்று அழிவு பாதையில் சிந்திக்கும் இந்த உலகில் என்று அன்பின் ஆட்சி நடக்க தொடங்குறதோ, அன்று முதல் இந்த உலகம் பாதுகாப்பான இடமாக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. அதற்காகவே இந்த தொடர்கதை அர்ப்பணிக்கப் படுவதோடு மட்டுமல்லாமல், இந்த தொடர்கதை தொடர் புத்தகங்களாக வெளிவர உள்ளன.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners