எல். ஞான செல்வம்
முக்கடல் சங்கமிக்கும் குமரி மண்ணில் இயற்கை எழில் கொஞ்சும் செம்மன்விளை எனும் சிற்றூரில் பிறந்தவர் திருமதி. ஞான செல்வம் .சீரும் சிறப்பும் பெற்ற குடும்பத்தில் கடைக்குட்டி மகளாய் பிறந்தவர்.செல்வம் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர்.
இவரின் சிறு மற்றும் வாலிப வயது வாழ்க்கை புனித அந்தோனியார் ஆலயம். அதன் அமைப்புகளின் வளர்ச்சியை சுற்றியே இருந்தது. சிறுவயது முதலே அவரை எனக்குத் தெரியும். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கைணலாம்”. ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்குக் கடன் கொடுக்கிறார் என்ற வாசகங்களின் படி ஏழைகளிடம் அன்பு கொண்டவர். தேவையில் இருப்போரை அடையாளங்கண்டு ஓடோடி வந்து உதவி செய்யும் குணம் படைத்தவர். சமுதாய முன்னேற்றத்தில் அதிகம் அக்கறை கொண்டவர்
எங்கள் ஊரில் உள்ள மக்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி
“வாரச்சீட்டு” நடத்தி மக்களின் சேமிப்பு உயர உதவியவர் கதைகள், கட்டுரைகள்,கவிதைகள்,நாவல்கள் எழுதுவதில் வல்லவர். கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கதையாசிரியர் செல்வத்தின் கதைகள், கவிதைகள் வாசகர்களின் சிந்தனையை தூண்டுவதாகவும்,கற்பனை திறனை வளர்ப்பதாகவும் இருக்கிறது. இவரின் படைப்புக்களான ஒவ்வொரு கவிதைகளும் வாசகர்களின் மனதில் நிலையான இடம் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயதில்லை
“யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணோம்....”
இன்றைய இளைய சமுதாயம் தமிழை நேசிக்க இவர் கதைகள் ஊக்கமளிக்கும். இவரின் சமூக சிந்தனை வாசகர்களின் மத்தியிலும் உலா வரும் என்பதில் ஐயமில்லை இவருடைய எழுத்துப் பணி சிறக்கவும், வானுயர புகழ்ப்பெறவும் வேண்டுமென்று வாழ்த்துகிறேன்......
அன்புடன்,
ம.சலோமி சார்லி M.A B.ED
சிங்கப்பூர்