கணவன் மனைவிக்குள் தற்காலிகமாக ஏற்படும் பிரிவு.. மீண்டும் சந்திக்கும் வேளையில் நாயகிக்கு விபத்து ஏற்பட்டு நினைவுகளை இழக்க,
நாயகியின் நினைவுகளையும் நிஜங்களையும் மீட்பு போராடும் காதல் கணவனின் கதையே
என் இதயத்துடிப்பானவள்..
ஒருவரை இந்த அளவு உயிராய் நேசிக்க முடியுமா?? அவர்கள் மேல் இவ்வளவு அன்பை காட்ட முடியுமா?? நாம் எதிர்பார்ப்பதை விட தன்னவளை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நாயகன் தான் விஜய்..
நாயகி லஷ்மியும் விஜய்க்கு சளைத்தவள் இல்லை.. தன்னவன் மீது உயிரையே வைத்துள்ள பாசக்காரி..
முதல் சந்திப்பே எதிர்பாரா முத்த சந்திப்பு.. மீண்டும் மீண்டும் எதிர்பார உதடு தீண்டல்கள்.. ஒருவரை ஒருவர் புரிந்து நேசிக்க தொடங்கிய நேரம் இவர்கள் காதலுக்கு எதிரியாய் வரும் வில்லன்..
அவனால் இவர்கள் காதல் என்ன ஆனது?? எதற்காக இவர்கள் பிரிந்து சென்றார்கள்??
நினைவுகளை இழந்த நாயகிக்கு மீண்டும் நினைவு திரும்பியதா??
காதல், அன்பு, குடும்பம், நட்பு என அனைத்தையும் ஒன்று சேர்ந்து துடிக்கும் கதைதான் இந்த இதயத்துடிப்பானவள்..