இந்த உலகில் காதல் என்பது அனைத்து உயிர்களுக்கும் மிகவும் பொதுவான ஒன்று. இந்த பூமி தோன்றிய காலம் முதலே எதோ ஒரு வகையில் எதோ சில உயிர்களுக்கிடையில் இருந்து வந்தது இந்த காதல். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் சிறு சிநேகம் கூட காதல் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள சிநேகம் மட்டும் காதல் இல்லை. தாய்க்கும் மகனுக்கும் இடையில் உள்ளதும் காதலே. தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ளதும் காதலே. எனது புத்தகத்தில் ஒரு பெண்ணுக்கு ஆணின் மீது உண்டான உணர்ச்சிகளை கவிதைகளாக எழுதியிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் அன்பு ஆதரவு தொடர்ந்து தேவை.