தஞ்சையை அடுத்த மெலட்டூர் கிராமம் என்றாலே உடன் ஞாபகத்துக்கு வருவது பாகவத மேளா நாட்டிய நாடகம்தான். இந்த தொண்மையான கலையை உலகறிய கொண்டு சேர்த்த யுக புருஷர் பரதம் ஸ்ரீ எஸ். நடராஜன் அவர்கள். தன் பால்ய வயதில் பாகவத மேளாவுக்காக சலங்கை கட்டிய அவரது கால்கள், இறுதி மூச்சு வரை ஆடிக் கொண்டேதான் இருந்தன. அவரது சொல்லும், செயலும், சிந்தனையும், மூச்சுக் காற்றும் பாகவத மேளாவின் ஏற்றத்துக்காகவே இயங்கின. தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் சங்கீத் நாடக அகாதமியின் விருதும் அவரின் மேன்மைக்கு சிறப்பு சேர்த்தன. தான் பெற்ற இந்த அரிய கலையை, இந்த மண்ணின் மக்களுக்கே எந்த வணிக நோக்கமும் இல்லாமல் திருப்பி வழங்க வேண்டும் என்கிற சிந்தனையில் அவர் எடுத்த பெரும் பணி மகத்தானது. இன்றைக்கு மெலட்டூர் கிராமத்தில் வசிக்கும் 70க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் பரதம் தெரிந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற் காரணம் பரதம் ஸ்ரீ எஸ். நடராஜன் அவர்கள். அவர் ஆடி ஆடி அகம் கரைந்தார், இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கினார். நாடி நாடி நரசிங்கரே, அவரோடு எப்போதும் இருந்தார். அந்த நரசிங்க பாட்டையில், அவர் உணர்ந்த தெய்வீக அனுபவங்கள் நமக்கு புதிய வெளிச்சத்தை கொடுக்கும் என்று உயர்வாக எண்ணுவோமாக.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners