இந்த புத்தகத்தில்
எனது மனதை வருடிய மல்லிகை பூக்களும்
எனது மனதை கிழித்த கோடாரிகளும்
ஒருங்கே அமைந்ததாகும்.
இதில் எனது ஏற்பட்ட சந்தோசங்கள் கோபங்கள ஏமாற்றங்கள் கனவுகள் கற்பனைகள் அறிவுரைகள் அனைத்தையும் எந்த சமரசமும் இன்றி வசன நடை கவிதை நடையென
உணர்வுகளை ஒன்று திரட்டி எழுதியுள்ளேன்.
எனது பெயர் பிரபு பக்தமார்க்கண்டேயன். சொந்த ஊர் கோயமுத்தூரில் உள்ள கள்ளிமடை எனும் சிற்றூர். தமிழில் பாடத்தில் நான் சுமாராக மாணவன். இருப்பினும் தமிழ் திரைப்பாடல்கள் மற்றும் தமிழ் கவிஞர்களின் சொற்பொழிவுகள் மீது ஆர்வம் கொண்டவன். அவற்றின் வெளிப்பாடே. இது போன்ற கவிதை தொகுப்பாகும். நான் இதற்கு முன்பு பள்ளி பருவ ஞாபகங்களை உள்ளடக்கிய 6 முதல் 10 வரை என்ற கவிதை புத்தகத்தை சொந்த பதிப்பாக வெளியிட்டுள்ளேன்.