திருமணத்தின் மூலம் ஒரு குடியிருப்பில் கணவன், மனைவி, தந்தை, தாய், மகன், மகள், தம்பி, தங்கை போன்ற உறவுமுறைகளுடன் பொதுப்பண்பைப் படைத்து, பாதுகாத்து வளர்வதே குடும்பம். இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்பொழுது, ஒரு சமூகத்திற்கு கட்டுப்படுவதன் மூலம், அச்சமூகத்தின் கூறுகளான சமயம், கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு அரசியல் போன்ற அனைத்து கூறுகளின் இயக்கத்திற்கும் குடும்பம் என்பது மிக அவசியமானதாகவும், இன்னும் சொல்லப்போனால் இவையனைத்திலும் குடும்பமே முதன்மையானதாகவும் காணப்படுகிறது.
பொதுவாக குடும்ப அமைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை முறையே, கூட்டுக் குடும்பம் மற்றும் தனிக் குடும்பம். கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள், கணவனின் திருமணமாகாத சகோதரிகள், திருமணமான சகோதரர்கள், அவர்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள், திருமணமாகாத சகோதரர்கள் மற்றும் கணவனின் வயது முதிர்ந்த அம்மா, அப்பா, அப்பா வழி தாத்தா, பாட்டி, ஆகியோரை உள்ளடக்கியதே கூட்டுக் குடும்பம். கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியதே தனிக்குடும்பம். இவை தவிர வேறு சில குடும்ப அமைப்புகளும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளது. அவைகளைப் பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners