Share this book with your friends

Gurutchethram / குருட்ஷேத்திரம் Tamil Articles

Author Name: P.mathiyalagan | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ள திருதராஷ்டிரன் சகுனி காய் உருட்டுகையில் என் மகன் ஜெயித்தானா ஜெயித்தானா என்று பேராவல் கொண்டு கேட்கிறான். பாஞ்சாலி அவையில் துகிலுரியப்பட்டபோது பீஷ்மரின் பேச்சு அறத்தை முன்னிறுத்துவதாக இல்லை. துரியோதனாதியர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். தருமர் தன்னையே பணயம் வைத்து இழந்த பிறகு என்னைப் பணயம் வைப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது திரெளபதியின் இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே படுகிறது. பீஷ்மர் எழுந்து நின்று பேசுகிறார் தருமன் அடிமைப்பட்ட பிறகு தருமனின் மனைவியும் அடிமையாகிவிடுகிறாள் என்ன ஒரு நீதி பார்த்தீர்களா? அவருடைய அன்றைய பேச்சில் சாணக்யத்தனமும் இல்லை சத்தியமும் தென்படவில்லை. பீஷ்மர் திரெளபதியின் மீது இரக்கம் கொள்ளாததற்கு அவர் பெண்ணினத்தையே வெறுத்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ப.மதியழகன்

ப.மதியழகன்(28.3.1980)

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள், பதாகை, பாரத்ரைட்டர்ஸ் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.

முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. ஐந்தாவது கவிதை தொகுப்பாக சாத்தானின் வேதம் 2019 ஜூலை மாதம் வெளிவந்தது. முதல் சிறுகதை தொகுப்பான நந்தி  2019 செப்டம்பர் மாதம் வெளிவந்தது தொடர்ந்து 2020ல் மைஇருட்டு(கவிதைகள்) தும்பி(ஹைக்கூ) ஜென்ஊஞ்சல்(ஜென்கவிதைகள்)  வெளிவந்துள்ளது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைளும் வெளிவந்துள்ளது.

தற்போது மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக வேலை செய்து வருகிறார்.

Read More...

Achievements