 
                        
                        முகநூல் பாவனையின் பாதுகாப்பு எமது சிந்தனையிலும் எமது கையிலும் தான் உள்ளது.
நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அது பலனைத் தரும்.நல்ல விடயங்களைத் தேடிக் கற்றுக் கொள்ளலாம். நல்ல சிந்தனை கொண்ட பகிர்வுகளில் நல்லதை நாம் எடுத்துக் கொள்ளலாம். முகநூலை நமது நேரமெல்லாம் பயன்படுத்தாமல் நமக்கு கிடைக்கும் சில ஓய்வு நேரங்களில் பயன்படுத்தலாம்.
லைக் கமெண்டை எதிர்பார்க்கக் கூடாது. நமக்கு வரும் லைக் கமெண்டின் எண்ணிக்கையை வைத்து நமது தேவைகள் பூர்த்தியாகப் போவதுமில்லை. நமது வாழ்வாதாரத்தை அது மேம்படுத்தப் போவதுமில்லை . எந்தப் பயனும் இல்லை எனும் போது அதற்கு அடிமையாய் இருக்கக் கூடாது. நமது கருத்துக்கள் ஒருவரையாவது சென்றடைந்து பயனளித்தால் போதும்.
நமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் , நமது திறமையை வளர்த்துக் கொள்ள நமக்கு பயன்மிக்க போஸ்ட்டுக்களை போடுபவர்களை நமது துறைக்கு பயன்படக் கூடியவர்களை என நாம் நண்பர்கள் லிஸ்டில் வைத்துக் கொள்ளலாம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners