ஒரு கற்பனை உலகில் மூன்று தேசங்கள். இவை புவியியல் காரணங்களால் தனித்திருக்கின்றன. இம்மூன்று தேசங்களும் பெரும் மாறுதலுக்கு தயாராகின்றன. ஆனால் இந்த மாறுதல் வன்முறை தவிர்த்து மென்புரட்சியின் மூலமாக அடையப்படுகிறது. பிற தேசங்களுடன் வர்த்தகத்தொடர்பு, கருத்து மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் இந்த மென்புரட்சியின் அஸ்திவாரம். இணைந்த உலகமே மானுட சமூகத்தின் துயர் களைய ஏற்ற வழி என்பதை இந்த நாவல் வலியுறுத்துகிறது.
இக்கருத்தை தத்துவம், அறிவியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளின் துணையுடன் நிறுவுகிறது. நாவலில் மேல் நாட்டு தத்துவ விவாதங்கள் காணப்பட்டாலும், இந்திய தத்துவ நோக்கி இந்நாவலுக்கு அடிப்படை. மேலும் இந்நாவல் அறிவியலை மட்டும் ஆராயமல் அறிவியலின் தத்துவத்தை தனது கதைமாந்தர்களின் வழியாக அலசுகிறது.
இந்நாவல் தமிழில் இது வரை கையாளப்படாத கதைக்களனை கொண்டுள்ளது. அதனால் வாசகருக்கு இனிய வாசிப்பனுபவம் கொடுப்பதாகவும் உள்ளது.
Delete your review
Your review will be permanently removed from this book.Delete your review
Your review will be permanently removed from this book.Delete your review
Your review will be permanently removed from this book.