தன் காதலனிடம் தன் உலகம் முழுவதையும் கண்டக் காதலியால் சொல்லப்பட்ட காதல் கவிதைகளின் தொகுப்பு இது. அவள் ஆர்வத்துடன் தேடும் போது, அவன் ஒதுங்கி, தன் சொந்த உலகத்தில் தன் சொந்த காரியங்களைச் செய்கிறான். ஆனால் அவள் அவரிடம் காணும் மௌனம், அவளை அலட்சியம் பண்ணும் தூரம், நேர்மை, நுணுக்கம், திறன்கள் மற்றும் அவரது ஆளுமை, இவைகளில் ஒரு இன்றியமையாதப் பொலிவைக் காண்கிறாள். காதலனின் கற்பனையின் பலவிதமான உணர்ச்சிகளையும் வெளிப்பாடுகளையும், காதலிக்க வேண்டும், காதலிக்கப்படவேண்டும் என்ற ஏக்கத்தையும், ஓயாத அன்பின் வலிமையும், தளராத மற்றும் ஆர்வமுள்ள தேடுதலால் உருவாக்கப்பட்ட தூரத்தின் நெருக்கமான உறவும், இணைப்பின் பிணைப்பாலாகும் மன எழுச்சி என்ற பல உணர்வுகளை உள்ளடங்கிய கவிதை கதை ஆகும்.