இந்தியாவிற்கென்று அரசியல் சட்டம் அவசியமானது என்று எம்.என்.ராய் இந்திய விடுதலைக்கு முன்பே 1934 ல் கருத்து தெரிவித்துள்ளார்.இன்றைய நவீன கால யுகத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை போற்றுவதற்கு காரணம் அதனுடைய எழுதப்பட்ட அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயக கலாச்சாரம் போன்ற காரணிகள் ஆகும்.இவ்வாறான அரசியல் சட்டம் இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கம் பெற்றது.உரிமைகள்,கடமைகள் நிர்வாகம், சுதந்திர அரசு அமைப்புகள், ஆணையங்கள், நீதித்துறை சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.368 சட்டத்தின் கீழ் சட்ட சீர்திருத்தம் சிறந்து செயல்படுவதால் பெருவாரியான சூழ்நிலைகளில் காலத்திற்கு ஏற்றார் போல சட்டங்கள் மாற்றப்படுகின்றன அல்லது சில தேவையான பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.மாணவர் சமூகம் கண்டிப்பாக அரசியல் சட்டம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.இதனாலேயே பல கல்லூரி பல்கலைக்கழகங்களில் அரசியல் சட்டம் கட்டாய பாடமாக உள்ளது.ஒவ்வொரு இந்திய பிரஜையும் இப்புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.போட்டி தேர்வுகளுக்கும் இப்புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners