ஒரு இளைஞன் தன் கண்ணால் காணும் பொருள்முதல்வாத உலகத்திற்காக வாழ்வதுதான் வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருக்கும் பொழுது விண்ணுலகில் இருந்து பேராற்றல் கிடைத்தால் என்ன ஆகும்?
அவன் வாழ்க்கையின் காரணத்தை உணர்வானா? மூடநம்பிக்கை என்று அவன் நினைத்த கதைகள் உண்மை என்று உணர்ந்தால் என்ன ஆகும்?
இதுவரை இந்த உலகம் காணாத ஒரு போர். மனிதர்களின் ஒரே நம்பிக்கை அவன் ஒருவன்தான். இது அவனுடைய வாழ்க்கைப் பயணம். இருள் சூழும் மண்ணகத்தை காரிருளில் இருந்து அவன் காப்பாற்றமுடியுமா எனும் கேள்விக்கு அவனுடைய வாழ்க்கை எழுதப் போகும் விடை.
முன்னோர்கள் கூறிய கதையில் அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் மண்ணவன் ஒருவன் தான்தானா எனும் ஏகனின் ஐயம் திருமா?
போராடாமல் எதற்கும் விடை கிடைக்காது. எங்களோடு இணைந்து நீங்களும் போரிடுங்கள். இறுதிப்போர் உங்களை புதிய ஒரு உலகுக்கு அழைத்துச் செல்லும். காலம் மாறினாலும், உலகங்கள் மாறினாலும், மனிதரின் இன்பம், துன்பம், கோபம், காதல், வியப்பு என்றுமே மாறாது என்று காண்போம். காரகர்களுக்கும் விண்ணவருக்கும் நடுவில் நடக்கும் இந்தப் போரில் நாமும் இணைவோம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners