மும்பை பத்திரிக்கையொன்றில் ஜர்னலிஸ்ட்டாக பணியாற்றும் சில்பா, நெடுநாட்களுக்கு பிறகு சென்னையில் கணவன், குழந்தை என வசிக்கும் தோழி யாமினியைக் காண அவளுக்கே தெரியப்படுத்தாமல் அவள் வீட்டிற்கு வருகிறாள். அவளைப் பார்த்ததும் சில்பா அதிர்ச்சியடைந்து உறைந்துபோகிறாள்.அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்ன? கண்முன்னே சிதறி கிடக்கும் கேள்விகளுக்கு விடை தேடுகிறாள்? கிடைத்ததா? அதற்கு சில்பா என்ன செய்யப் போகிறாள்?
இது ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்ட திருமணம் ஆன ஆண் - பெண் உளவியல் சார்ந்த கதை.
மாதங்களில் அவள் மார்கழி !
வாணி, நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான பெண் பாடகி. தருண் ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன். ஒரு மேடை கச்சேரியில் பாடும் வாணியைப் பார்த்தவுடன் ஒரு தலை காதல் கொள்கிறான் தருண். வாணியைத் திருமணம் செய்ய தருண் பல தடைகளை மீறி முயற்சிக்கிறான். அதே சமயம் வாணிக்கு திரைத்துறையில் பாடும் வாய்ப்பு வருகிறது.
இக்கட்டான சூழலில் வாணிக்கு எதிர்பாரா திரைத்துறை வாய்ப்பால் சொந்த வாழ்வில் சில பிரச்சனைகள் உருவாகின்றன. அதை சமாளிக்க சில யுக்திகளை கையாளுகிறாள்,ஒரு சிறு சாவி மூலம் பெருங்கதவை திறப்பது போல. அவை பலன் தந்ததா? தருண் தன் காதலை சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றனா? வாணி தன் திரைத்துறையில் வந்த பிரச்சனையை எப்படி எதிர்க் கொள்கிறாள்?
இது ஒரு வெளிப்படையான, தெளிவான, தைரியமிக்க ஆனால் தன்னலமற்ற பெண்ணின் கதை.