எனது இரண்டாம் புத்தகமான இந்நூல் "காதல் கற்பூரம்" என்ற தலைப்பில் மனதில் காதலை விதைக்கும் வகையில் கவிதைகளாக வெளிவந்துள்ளது. இதற்கு உறுதுணையாக நின்ற என் உயிரினும் மேலான அன்பு தமக்கை பிரியா (இலங்கை) அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் மட்டுமே என் கடனை முடித்துவிட முடியாது.
நான் எழுதியிருக்கும் கவிதைகள் பல சுவைகளில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அது உங்களை ஆழமான காதலுக்குள் இழுத்துசெல்லும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காதலைப் படிக்க படிக்க மனதில் அன்பு வாசம் வீசும். அதனால், வாழ்க்கையில் புதுப்புது இன்பங்கள் வரும்! இந்த நோக்கத்தில் காதலை சில கோணங்களில் நான் யோசித்து, நேசித்து எழுத்துகளாக மாற்றியுள்ளேன்!
வாசிப்பவர்கள் என் உணர்வுகளை மதிப்பவர்களாக பார்க்கிறேன். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!