சிறிது நேரத்தில் இங்கே ஒரு அதிசயம் அரங்கேறப் போகிறது. நாமும் பார்க்கலாம் வாருங்கள்.....
ஒரு மிகப் பெரிய யானை ஆடி அசைந்து அங்கே வந்தது. அது மெதுவாக நடந்து சென்று ஒரு மரத்தடியில் மண்டியிட்டு அமர்ந்து தன் துதிக்கையில் கொண்டு வந்திருந்த நீரை எதன் மீதோ அபிஷேகம் செய்தது. அது என்னவென்று உற்றுப் பார்த்தால் தான் தெரியும். வாருங்கள் அருகில் சென்று பார்க்கலாம்.....
அட.....அந்த மகிழம்பூ மரத்தடியில் தானாகவே தோன்றியிருந்தது லிங்கம் போன்ற அமைப்பு. அபிஷேகம் செய்த பிறகு எழுந்த யானை, அந்த மரத்தைப் பிடித்து இலேசாக உலுக்கியவுடன்..... அந்த மரத்திலிருந்த மகிழம் பூக்கள் லிங்கத்தின் மீது, பூமாரி பொழிவது போல் உதிர்ந்ததைக் காண கண் கோடி வேண்டும். அதன் பின் தன் தும்பிக்கையை மேல் நோக்கித் தூக்கி, வணங்குவது போல் ஒரு முறை பிளிறி விட்டு, மீண்டும் திரும்பிச் சென்று விட்டது.
அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ வாசனையும், சந்தன வாசனையும் இயற்கையிலேயே ஒரு தெய்வீக மணத்தைக் கமழச் செய்து கொண்டிருந்தது. யானை சென்ற சிறிது நேரத்தில், அந்த மகிழமரத்தின் பொந்திலிருந்து வெளிவந்த பெரிய கருநாகம் மானுட வடிவெடுத்தது. மானுட வடிவெடுத்தவரைச் சுற்றிலும், ஒரு ஒளி பரவி அவருடலை பொன் போல் ஒளிரச் செய்தது........
இந்தக் கதையின் தொடர்ச்சியைப் படிக்க வேண்டுமா?. நாவலைப் புரட்டுங்கள்..... அருமையான நடையழகுடன், உங்களை ஜமீன் வம்ச கதைக்குள் இட்டுச் செல்லும். ஆன்மீகம், அமானுஷ்யம் கலந்து கானகத்தில் புதைந்த இரகசியம் பற்றி இக்கதை விவரிக்கிறது. உங்கள் எதிர்பார்பிற்கு ஏற்றவகையில் திகிலும் மர்மமும் கலந்த கலவை இந்த நாவல்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners