இயற்கையால் வீழ்த்தப்பட்ட மனிதனுக்கு அதன் பின் மிஞ்சுவது இரண்டே முகங்கள் தான். ஒன்று, தீரா பேரன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் முகம். மற்றொன்று, பெரும் கோபத்தையும் வன்மத்தையும் வெளிப்படுத்தும் முகம். வீழ்த்தப்பட்ட மனிதன் எந்த முகத்தை அணிகிறான் என்பது அவனுள் இருக்கும் அகந்தையின் அளவு சார்ந்தது.
அறுபது வயது நீலகண்ட பிள்ளை ஒரு நாள் இயற்கையால் வீழ்த்தப்படுகிறார், அல்லது வீழ்த்தப்பட்டதாக உணர்கிறார். வேறு வழியின்றி, தான் வீழ்த்தப்பட்டவன் என்பதைப் பிறரிடம் இருந்தும் தன்னிடம் இருந்தும் மறைக்கும் முயற்சியாக ஒரு முகத்தை அல்லது முகமூடியை அணிந்து கொள்கிறார். அம்முயற்சியில் தோல்வியைத் தழுவுகிறார்.
ஒழிந்தோம், வீழ்ந்தோம் என்று தன் மனமே தன்னைக் கைவிடும் நேரத்தில் அதன் கதவைத் தட்டுகிறது காமம் எனும் உயிர்த்தெழுப்பும் உணர்ச்சி. அவர் கதவைத் திறந்தாரா? உயிர்த்தெழுந்தாரா? உயிர்த்தெழுந்தால் எழப்போவது அவதரித்த அரக்கனா? அல்லது கிறிஸ்துவா?
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners