விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் யாரும் சட்டை தைப்பதில்லை. அவற்றுக்கு மனம் இல்லை. குழப்பம் இல்லை. எதையும், உடம்பு உட்பட எதையும் மறைக்கத் தேவை இல்லை. நமக்கு எல்லாம் வேண்டும். பிறந்த அன்றே குட்டி சட்டை போட்டு விடுவார்கள். வளர வளர சட்டை மாறும். பெரிதாகும்.
போர்த்தாத மனங்கள் பார்க்க வேண்டும் போல் உள்ளது. போர்த்திக் கொள்ளும் வியாதி தாக்காமல் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை உள்ளது.