கவிதை பாடி கதையின் சாராம்சத்தை எடுத்துரைக்கும் உம் தனித்துவமை;
பதிவிடும் இடங்களில் எல்லாம் கருத்து சொல்லும் உம் பெருந்தன்மை;
பட்டியலிட ஏராளம் உண்டு; எதை சொல்வது? எதை விடுவது? கவிதாயினி!
எழுத்தாளர்களில் புதியவர், அனுபவசாலி என்ற பாரபட்சம் ஏதுமின்றி,
எல்லா கதைகளையும் ரசித்துப் படித்து,
எல்லா நேரங்களிலும்,
எல்லா கதைகளிலும்,
எல்லா கதாபாத்திரங்களிலும்,
உங்களைப் பொருத்தி,
உங்கள் பொன்னான நொடிகளை,
எங்களுடன் பேருவப்புடன் பகிர்ந்துகொண்டு,
எங்களை ஊக்குவிக்கும் அன்புத் தோழி!