ஒரு கருப்பு உருவம் துப்பாக்கியை லோட் செய்ய மேகஸினிலிருந்து குண்டு சம்பரில் வந்து நின்றது. அவன் அவசரமாக ட்ரிகரை அழுத்த குண்டுக்கு பின்னிருக்கும் சின்ன ஹேமர் குண்டின் மேல் வேகமாக முட்டியது. முட்டிய வேகத்தால் குண்டு வெடித்து துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு அவன் உடம்பில் பாய்ந்தது. வெள்ளை பங்களாவிலிருந்து அந்த கருப்பு உருவம் தப்பி ஓடியது.
“ஹலோ போலீஸ் ஸ்டேஷனா?” என்றது பதட்டமான பெண்ணின் குரல்