குமரிக்கண்டத்தில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நிலமனை, வானசாத்திரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாமுனி மயன் யாளிகளைக் கொண்டு பாதுகாத்து வந்த பெருவள நாட்டை ஆண்ட மன்னர் திருவிற் பாண்டியன் தலைநகர் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கப் பெருவிழா நடத்திய நிகழ்வில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார். அப்பொழுது, இதனை சீர்குலைக்க எண்ணி வந்த பெரும் எதிர்ப்பை, பேராபத்தை அவர்கள் சமாளித்தார்களா? அல்லது வீழ்ந்தார்களா?