மனித மனம் என்பது ஒரு புரியாத புதிர் காரணம் அதனை அறிந்துகொள்வது என்பது அதனை விட புதிரான ஒன்று. காரணம் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பட்ட மனதை கொண்டு உள்ளான் கொண்டுள்ளான். அதில் அவனுக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது. அதனை இன்னொருவர் ;புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். காரணம் அனைவருமே அவர்கள் அவர்களுடைய உலகத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய உலகத்தை விட்டு வெளியே வருவதற்கான வழிகள் தெரிந்தால் தான் அவர்களால் மற்றவர்களை பற்றியே சிந்திக்க முடியும். இல்லை என்றால் அவர்களுடைய உலகத்தின் நிகழ்வுகளை கொண்டு தான் அவர்கள் மற்றவர்களை புரிந்து கொள்வார்கள். நான் இங்கே அந்த புரியாத உலகத்தை பற்றி விளக்க முற்படுகிறேன். முதலில் அவர்கள் புரிந்துகொண்ட ஒன்றிலிருந்து தொடங்குகினேறேன். காரணம் அவர்கள் புரிந்துகொண்ட ஒன்றில் இருந்து தான் இதனை ஆரம்பிக்க முடியும் என்பதனால். நான் இதில் முதலில் அவர்களுடைய மனதில் ஏற்படுகின்ற முதன்மையான உணர்வுகளை பற்றி முதலில் விவரிக்கிறேன், பிறகு அதற்கான தீர்வுகளை சிறிது சிறிதாக விளக்க முற்படுகிறேன். முதலில் அவர்களுடைய மனதின் முதன்மையான உணர்வுகள் என்ன என்பதனை பற்றி பற்றியல்ல இடுகின்றேன். அதன் பிறகு அதற்கான வழிமுறைகளை விவரிக்கிறேன்.
முதலில் மனித உணர்ச்சிகளை பட்டியல் இடுவோம்.
முதலில் அவர்களுக்கு ஏற்படுகின்ற உணர்ச்சிகளை பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். அவைகள்
1. பயம் 2. கோபம் 3. வெறுப்பு 4. அன்பு 5. துவேசம் 6. வருத்தம் 7, சந்தோசம் 8. துக்கம் 9. காழ்ப்புணர்ச்சி 10 . பழி உணர்ச்சி போன்றவைகள். மேலும் இவைகளை தவிர பலவிதமான உணர்வுகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தையும் மெதுவாக விளக்க முற்படுவோம்.
நான் இந்த அத்தியாயத்தில் முதலில் மனித உணர்வான பயத்தை பற்றி சிறிது விளக்கியுள்ளேன்