உறவுகளின் மேன்மை, அறம் சார்ந்த நம் பன்பாட்டு விழுமியங்கள், சமூக சிக்கல்கள் ஆகியவைகளை சொல்லும் கதைகளுக்கு என்றுமே ஆதரவு உண்டு.
இந்த புத்தகத்தில் உள்ள பத்து கதைகளும் உங்கள் மனதை தொடும் என்று நிச்சயம் நம்புகிறேன்.
சில ரகசியங்கள் என்கிற கதை ஆனந்த விகடனில் வந்த போது நிறைய பேர் தங்களது மாமாவை அடையாளம் கண்டு கொண்டார்கள்.
எருமை சவாரியில் இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கிற சுயநல பார்வையை கேள்வியில் வைக்கிறது.
ஆட்டோ கதையில் சினிமா எப்படி பாமர மக்களை சுரண்டுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
அண்டங்க்காக்கை கதை தோல்வி கண்ட ஒரு சினிமாக்காரனின் வலியை படம் பிடித்து காட்டுகிறது
அனைத்து கதைகளும் உங்களை திருப்தி படுத்திவிட்டால் அதை எனது வெற்றியாக கருதுவேன்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners