"அம்மா, எத்தனை முறை சொல்றது, அரேஞ்சுடு மேரேஜ்லாம் சுத்த போர் மா. நமக்கெல்லாம் லவ் மேரேஜ் தான் செட்டாகும். எனக்கே எனக்குனு ஒரு பொண்ணு வரணும். நாங்க ரெண்டு பேரும் உருகி உருகி லவ் பண்ணனும். ஒருவேளை அவ வீட்டில ஒத்துக்காம போனா, ‘கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்க கூட தான்’னு அவ சொல்ல, ‘இந்த ஜென்மம் மட்டுமில்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி, இதை யாராலையும் மாத்தா முடியாதுனு’ நான் சொல்ல, ஒரே லவ்விங், ரன்னிங், சேஸிங்னு திரில்லிங்கா கல்யாணம் பண்ணனும். அப்பதான் தான் நாளைக்கு என் புள்ளைங்களுக்கு 'அப்பா அம்மா கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரியுமானு கதை கதையா சொல்ல முடியும்'. அதை விட்டுட்டு போட்டோவ பார்த்து பொண்ண செலக்ட் பண்ணி, வீட்டுக்கு போய் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு தேமேனு கல்யாணம் பேசி முடிவு பண்ணுவாங்களா? ஸ்ஸ, நெவர்"
இப்படி சொல்லிட்டு சுத்திட்டு இருந்த நம்ம ஹீரோ வாழ்க்கையில எப்படி கல்யாணம் நடந்துச்சு, அவன் கேட்ட காதல் அவனுக்கு கிடைச்சுதானு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கங்க மக்களே!