மருத்துவமும், சட்டமும் சமுதாயத்தின் இரண்டுகண்களைப் போன்றது. இந்த இரண்டு கண்களின் நோக்கம்மக்களின் நல்வாழ்வை உறுதிப் படுத்துவது என்பதாகஇருத்தல் வேண்டும், கண்கள் இரண்டாயினும் காட்சிஒன்றுதானே! இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண இயலாது. அவ்வாறு காண முயன்றால் அவ்வாறு கண்ணுக்குதெரிந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று பொருள்,எனவே மருத்துவமும் சட்டமும் ஒன்று இணைந்து இயங்கிமக்களின் நல்வாழ்வினை உறுதி செய்ய வேண்டும்.ஒரே முகத்தில் இரண்டு கண்கள் அருகருகே இருந்தாலும்ஒரு கண் மற்றொரு கண்ணைப் பார்ப்பதில்லை. அது ஒருகண்ணாடியின் மூலமாகவே ஒன்றையொன்று பார்த்துக் கொள்கின்றன. அது போன்றே மருத்துவமும், சட்டமும்சமுதாயம் என்கிற கண்ணாடியின் வழியாகவே ஒன்றையொன்று காணுதற்கு இயலும். சமூதாயத்தில் அவை சிறந்த மக்கள் நல காவலனாக இயங்க வேண்டும். அவ்வாறு இயங்குவதற்கு அவைகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு தேவையானதாகும்..மருத்துவர்கள் சட்ட வல்லுநர்களை ஒரு வித மிரட்சியுடன் நோக்குதலும், சட்ட வல்லுநர்கள் மருத்துவர்களை ஒரு வித ஐயத்துடன் பார்ப்பதை விட்டுவிடுதலும் பொது மக்களின் நன்மைக்கு உகந்ததாகும்.மருத்துவத் துறையில் உள்ள சில சட்டங்களைக் குறித்து இந்த நூல் ஒரு சிறிய ஆய்வு நூலாக எழுதப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை வலுப்படுத்துவதும் பொது மக்களுக்கு இவற்றைக் குறித்த செய்திகளை தெரிவிப்பதும் இந்த நூலின்முக்கிய நோக்கமாகும்.