மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, என்ற இந்தக் கதை , பாண்டிக் குடும்பம் என்ற தொடர் தலைப்பின் கீழ் , பாண்டிக் குடும்ப கதை மாந்தர்களை வைத்து , எழுதப்பட்ட மூன்றாவது கதையாகும்.
மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே- 2 பாகங்கள், ஆகிய கதைகளைத் தொடர்ந்து, அந்த இரட்டை கதைகள் நடந்த காலத்திலிருக்குது, ஏழு வருட இடைவெளியில் ,இந்தக் கதை நடப்பதாக சித்தரித்து உள்ளேன். இந்த கதைகளை,தனியாகவும் வாசிக்கலாம்,தொடர் வாசிப்பாகவும் வாசிக்கலாம்.
மதுரை, வட்டார வழக்கில் எழுதப் பட்ட, இந்தக் கதை,ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களைச் சித்தரிப்பதாக, தென் கிழக்கு சீமை மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
அதிகமான கதைமாந்தர்கள் இருப்பதே,இந்தக் கதையின் பலம்,எனவே,வாசகர்கள், அந்த சிரமத்தைப் பார்க்காமல்,கதையோடு பயணித்தீர்களேயானால் ,ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த நிறைவைத் தரும்.
பாண்டிக் குடும்பத்தில், இந்தக் கதையின் நாயகனாக,முத்துப் பாண்டியும், அவனது மயக்கத்தைத் தீர்க்கும் பைங்கிளியாக சிவப்ரியாவும் வருகிறார்கள், உறவுகளுக்குள் , ஒருவர் செய்யும் செயல்கள் ,அவர்களைச் சார்ந்தவர்களையும் எப்படிப் பாதிக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதைச் சொல்ல வரும்,விறுவிறுப்பான கதை. முந்தைய இரண்டு கதைகளின் நாயகன்,நாயகிகளும் இதில் பயணிப்பது, பாண்டிக்குடும்பத்தின் ,ஒவ்வொரு காலகட்டத்தையும் விவரிப்பதே இந்த கதையின் சிறப்பு.
வாசகர்கள் வசதிக்காக, இரண்டு பாகமாகத் தருகிறேன். வாசித்து விமர்சனம் தாருங்கள்.