தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து கொண்டு, காணாமல் போகின்றான் தீபக், அவனை தேடும் பணியில் ஈடுபடுகிறான் கலைமாறன். அவனது தேடுதலின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதிய திருப்பம் உண்டாகிறது. இதேடலில் தீபக்கின் நண்பர்கள் மூவரை சந்தித்து அவர்களது கடந்த கால நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்கிறான்.
பணத்திற்காக தொடங்கிய இந்த தேடல் பல்வேறு திருப்பங்களை சந்தித்து, முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் நகர தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் இந்த ஒட்டுமொத்த பிரச்சனையுமே 10வருடங்களுக்கு முன் இறந்து போன ஒரு பெண்ணை மையப்படுத்தி நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக தீபக்கின் நண்பர்கள் கூறிய கடந்த கால நிகழ்வுகள் சற்றே எதிர்மறையாக இருந்தது.