அரசியலை அறிவியல் ரீதியாக அணுகியவர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர் “பாலிடிக்ஸ்” “எத்திக்ஸ்” போன்ற முக்கிய படைப்புகளை படைத்த அரிஸ்டாட்டில் ஆவார்.அதற்கு முன்னதாகவே அர்த்த சாஸ்திரத்தை வழங்கிய கௌதிலியர் என்கிற சாணக்கியர், அரசியலை மனித இயல்பை அடிப்படையாக கொண்டு எதார்த்த வாதியாகவும் சக்தியை மையமாக வைத்தும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.பொலீபியாஸ், சிசரோ, கன்பூசியஸ், தூசிடைட்ஸ், மார்சீலியோ செயின்ட் அகஸ்டின், கார்ல் மார்க்ஸ், அலெக்ஸ் டி டோக்வில்லி போன்ற பல சிந்தனைவாதிகளும்,அரசியல் அறிவியலை வெவ்வேறு பார்வையிலே தங்களுடைய படைப்புகளில் பதிவிட்டு உள்ளனர். அரசியலை முழு அறிவியலாக சித்தரித்து கல்வி நோக்கில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது “லீவேதான்” என்கிற மாபெரும் படைப்பை உருவாக்கிய ஹாப்ஸ் ஆவார்.நடத்தைவாதம்,பின்-நடத்தைவாதம்,கட்டுமான செயல்பாட்டு வாதம் முறைமை கோட்பாடு, விளையாட்டு கோட்பாடு போன்ற பல ஆராய்ச்சி தீர்வுகள் அப்போதைக்கு அப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அரசியல் துறை, அறிவியல் ஒட்டியே செயல்பட வேண்டும் என்று ஒரு சாராரும்,மதிப்புகளை ஒட்டியே அரசியல் அறிவியல் என்கிற பாடம் அமைந்துள்ளதாக மறு சாராரும் பிரதிவாதம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய சூழ்நிலையிலே நவீன அரசியல் பகுப்பாய்வு என்கிற இந்த புத்தகம் பல கல்லூரி, பல்கலை கழகங்களின் ஆசிரியர்களின் மூலமாக வெளி கொணரப்பட்டுள்ளது.மதிப்புகள் மற்றும் உண்மைகள் சார்ந்த கருத்து வாதங்கள்,அரசியலில் அறிவியலின் நிலை,புதிய கோட்பாடுகளின் உருவாக்கம் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, என் இ டி போன்ற தேர்வுகளுக்கு மட்டுமல்லாது அரசியல் அறிவியலிலே இளங்கலை மற்றும் முதுகலை, பிஹெச்டி போன்ற படிப்புகளுக்கும் இப்படைப்பு உதவும் என்று நம்பப்படுகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners