வாளிப்பான இலைகளில் பச்சை நரம்புத்தடத்தில் ஒரு எறும்பின் பயணம்!
ஆழமான கேள்விகள், அற்புதமான தகவல்களுடன் நம் கையில் இருக்கும் முக்கியமான எழுத்து. எழுத்து இலக்கியங்களில் புதிய வகைமையை முன்னோர்களின் கைப்பற்றிக் கண்டடைய முயன்று உள்ளார்.
- கவிஞர் ஸ்டாலின் சரவணன்
சித்தர்களின் கொள்கைகள் எக்காலத்திலும் விடுதலையையும் மேன்மையையும் முன்னிருத்தும் கருத்துக்கள் என்பதை இளைஞர்களுக்குப் புரியவைத்தேன்.
திரிகிறேன். உமிழ்கிறேன். சிலவற்றை என்னையறியாமல் கொட்டுகிறேன். சிலவற்றை அறிந்து தேக்கி, கடைந்தெடுத்து உமிழ்கிறேன். எல்லாம் என்னிலிருந்து கிளைப்பவை. ஆனாலும் என்னைத் தாண்டிய ஏதோ ஒன்றால் அனுப்பப்படுபவை.
நீல நிறத்தில் தண்ணீர், நெடிதாய்ப் பரந்திருந்தது, அதன் முடிவுகளில் தொலைதூரத்து உயர் மலைகள். உண்மையில் மூச்சை ஒரு கணம் நிறுத்திவிட்டது அந்த அழகு.
அவர் ஒரு விசித்திரமான ஆள். ஒருமுறை அவரே தொலைந்துவிட்டார், அவருக்குள்ளே காணாமல் போயிருக்கிறார். ஒரு பித்தனாக சான் ஓசேயிலிருந்து கிளம்பி லிமோன் வரை, சுமார் மூன்று மணி நேரக் கார்ப் பயணம், நடந்தே போயிருக்கிறார்.
பனி கொட்டிக்கொண்டுதான் இருந்தது. கார்கள் பறந்தன. ஜெர்மானிய சாலைகளில் சில இடங்களில் வேகக் கட்டுப்பாடு இல்லையென்பதால் 200-250 கிலோமீட்டர்களில் எல்லாம் கார்கள் விரைந்துகொண்டிருந்தன.