இந்த மண்ணுக்கு துளியும் சம்மந்தமற்ற சம்பந்தங்கள் இம்மண்ணில் வேர்விட்டு நிற்பதால் என்னவோ, 'ஒருவர் என்ன எழுத வேண்டும்' என்பதும், 'அவர் எழுத்தை வைத்து இன்னவராகத்தான் இருக்க வேண்டும்' என்பதும் இன்னொருவரால் இங்கு தீர்மானிக்கப்படுகிறது.
1957; முதுகுளத்தூர் கலவரத்தின் நீட்சியாக பல குடும்பங்கள் பல்வேறு காலகட்டங்களில் சாதிய மோதலை சகிக்க முடியாமல் ஊரை விட்டு வெளியேறியபடி இருந்தது. அப்படி வெளியேறிய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் அடங்கும்.
"அப்படியென்றால், நீங்கள் அந்த குறிப்பிட்ட சமூகங்களை வசைபாடிதானே எழுதியிருக்க வேண்டும்" என்று தாம் மனதுக்குள் பேசுவது என் செவிகளுக்கு கேட்கிறது. நான், நெருப்பு வைத்தவனை விட்டுவிட்டு நெருப்பை வசைபாடும் அளவிற்கு அடிமுட்டாள் இல்லை.
தமிழகம் போல் ஈழமும் ஒரு காலத்தில் சாதியப் பேதங்களுக்கு ஆட்பட்ட தேசமே. ஆனால், அங்கு எப்படி தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடுதலை வேண்டி துவக்கு ஏந்தினார்கள்? ஏனெனில், 'இனவுணர்வு' எனும் நெருப்பை தூக்கிப் பிடித்த தலைவனிடம் தன்னை சமர்ப்பணம் செய்ததால் அது சாத்தியமானது.
'மூலவர்' என்ற படைப்பு தமிழ்ப் புலமையின் கண்ணாடி; அதை வைக்கிறேன் உங்களின் முன்னாடி!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners