 
                        
                        மனித வாழ்வில் நிகழும் ஒவ்வொரு காரியமும் அவருடைய ஆழ்மனதில் பதியப்பட்ட பதிவுகளின் வெளிப்பாடு ஆகும். ஆழ்மனதில் கூறப்படும் காரியத்தை ஆழ்மனம் உங்களுடைய சேவகன் போல் செயல்பட்டு நடத்திக்காட்டும். ஆழ்மனதிற்கு நீங்கள் தரக்கூடிய தகவல் நேர்மறையாக இருந்தால், அதனால் நிகழக்கூடிய விளைவுகள் நேர்மையாகவே இருக்கும். ஆழ்மனதை தூண்டி விடுவதால் எந்த காரியத்தையும் நீங்கள் சாதிக்க இயலும் நேர்மறை தூண்டுதல் உருவாக்கப்பட்டால் நேர்மறை விளைவுகள் நிகழும். அத்தகைய வழிகள் அல்லது முறைகள் பற்றி இந்தப் புத்தகம் விரிவாக கூறுகிறது. எனவே எந்த முடிவுகளையும் ஆழ்மனதில் எழுதி வைக்கவும். நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு வெற்றிகரமாக உங்களை அடையும்.நேர்மறை சுயபிரகடணங்களை செய்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிபெற செய்யுங்கள். இளம்வயதில் ஒருவருடைய மனதில் எழுதப்படும் காரியம் தொடர் முயற்சியால் கண்டிப்பாக நிறைவேறும். ஆழ்மனதின் சக்தி கொண்டு ஆண்-பெண் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்ள இயலும். நான் விரும்பும் கணவர்/மனைவி எனக்கு என் விருப்பம் போல கிடைக்கிறார் என சுயபிரகடணம் செய்தால் அதுவே ஆழ்மனதில் பதியப்பட்டு நிறைவேறும்.அச்சம் உங்களை ஆட்கொள்ளும் போது அதற்கு எதிரான ஒரு எண்ணத்தை உங்களுடைய ஆழ்மனம் உங்களுக்குள் உருவாக்கும். தடைகளை தீர்த்திட அந்த தடைகள் பற்றிய உண்மையை ஆழ்மனதிற்கு தெரியப்படுத்துங்கள். ஆழ்மனம் சரியான தீர்வை உங்களுக்கு அளிக்கும். மனிதரின் உடல் சிதைவடைவதற்க்கு வயது மட்டும் காரணம் இல்லை. வயதாகி விட்டதே என்று மனதில் எண்ணுவதே அதற்கு காரணம். எனவே ஆழ்மனதில் நல்ல எண்ணங்களை தேக்கி செழுமையான வாழ்வு வாழுங்கள்.