சிற்பியின் கற்பனை அடிதாங்கி உருவம் கொள்ளும்., ஓவியனின் கற்பனை பல வர்ணங்களை பூசிக் கொள்ளும், வர்ணனையாளரின் கற்பனையோ வார்த்தை விளையாட்டின் ஜாலம் பேசும்... கவிஞனின் கற்பனையோ இவையனைத்தையும் தாங்கிச் செல்லும்... என் கற்பனையின் நிழலுக்கு உயிர் கொடுத்தேன், ஒன்றாய் பயணித்தேன்... என் "நிழலுடன் ஒரு பயணம்" சாத்தியமானது... இதில், உங்களுடன் கைக்கோர்த்து ஒன்றாய் பயணிக்கவே... இச்சிறு படைப்பு...