விழிகள் உறங்கினாலும்,
அறிவு ஆயிரம் கேள்விகளை அள்ளிக்கொண்டு அலையும்,
விடைகளை எவரிடமேனும் தேடி,குறிப்பாய் இல்லாதுபோன எனது தந்தையிடமும்...எப்போதும் அரவணைத்துக்கொள்ளும் இருளிடமும்,
ஆம்,அங்குதானே வெளிச்சம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது,
சுயம் கேட்கும் கேள்விகளுக்கு அகம் பதில்சொல்லித்தானே ஆகவேண்டும்.
அதன்படியாய்,இளைப்பாற இடந்தருகின்ற நிழலில் அமர்ந்தும் நிறைந்தும் கிடக்கின்ற பதில்களும் தெளிவுகளும் தெரிவுகளாய்,ஆழ்மனதை அரவணைக்கப் பயணிக்கும் முயற்சியே இந்த நிழல் வெளிச்சங்கள்...
ப.பாரத்கண்ணன்