பஞ்சமாபாதகம்
இது இரண்டு கிளைக்கதை கொண்ட நாவல். ஒருபக்கம் மான்யா – இனியன், இரு பத்திரிக்கையாளர்கள் சிலை கடத்தல் பற்றிய கட்டுரைக்காக புவனேஷ்வர் நகருக்கு வருகிறார்கள்.அங்கு மான்யாவின் தோழி பல்லவி வீட்டில் தங்குகிறார்கள். அமைதியாக ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கையில் இதற்கு பிறகு நடப்பவை எல்லாம் விபரீதத்தின் வகையில் சேர்ந்தது.மறுபக்கம் ஒரு பெரியவர் தன்னிடம் இருக்கும் நிலத்தை விற்க ஓம்நமச்சிவாயம் என்னும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் வருகிறார். அந்த நிகழ்வுக்குபின் என்ன நடக்கப் போகிறது? புவனேஷ்வர் நகரில் நடக்கும் சிலைக் கடத்தல் சம்பவங்கள், அதனூடே இருக்கும் தந்திரம், சினம், ஆசை, பேராசை, அகங்காரம் மற்றும் ஆணவம். அடுத்து என்ன நடக்கும் என தெரியாத ஒரு பரபரப்பான கதைக் களம்.
அரேபிய ரோஜா
மஹிமா, தைரியமிக்க ஒரு அழகான இளம்பெண், ஒரு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் பணியாற்றுகிறாள். தன் குழுவுடன் சேர்ந்து மருத்துவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை துபாயில் உள்ள அல்ஃஅரபத் என்னும் நிறுவனத்திற்காக கண்டுபிடிக்கிறாள். அப்போதிலிருந்து அவளுக்கு பிரச்சனைகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. முதலில் சாதாரணமாக வரும் மிரட்டல்கள் பின்பு அசாதாரணமாகின்றன. எதிரிகள் யார்.. எங்கு இருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியாத சூழ்நிலையில் பேராபத்து தனக்காக காத்திருக்கிறது என்று தெரிந்தும் துபாய் பயணம் மேற்கொள்கிறாள் மஹிமா. அவள் கால்கள் துபாய் தரையில் பட்டவுடன்தான் தெரிகிறது.. அவள் எத்தனை பெரிய விபரீதத்தில் சிக்கியிருக்கிறாள் என்று. இந்த அரேபிய ரோஜா மணக்குமா அல்லது மரணிக்குமா..?