இயேசுவின் உவமைகள்: சமூக நீதிக்கான ஓர் தேடல்
எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கிறிஸ்தேசுவின் உவமைகள் இடம்பெறுகின்றன. அவை எழுதப்பட்டச் சூழலை கருத்தில் கொண்டு, நாம் எப்படி அவற்றை நம் சூழலில் விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறது இந்நூல். இறையாளுகையின் விழுமியங்களை தன்னகத்தே கொண்டுள்ள இயேசுவின் உவமைகள் கிறிஸ்தவர்களை சமுக, அரசியல், பொருளாதார நிலைகளில் நீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், இறையரசின் முன்ருசியாக திருச்சபையை உருவாக்கவும் உந்தித்தள்ளும் ஆற்றல்மிகு இலக்கியமாக ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை இந்நூல் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இந்நூலில் இயேசுவின் உவமைகளை எளிமையாகவும் சமூக அறிவியல் பார்வையில் படித்து விளங்கிக் கொள்ளவும் சிறப்பாக ஆசிரியரால் எழுத்தாளப்பட்டுள்ளன.