 
                        
                        பெண்விடுதலை என்ற இந்த நூல்முற்றிலும் பெண்மைப்பற்றியே பேசக்கூடியவையாக எழுதியுள்ளார் கவிஞர் சபினாபகுருதீன், பெண்களுக்கு நடக்கும் அவலங்கள், உலகில் பல இடங்களில் பல பெண்களுக்கு நேரும் அநியாயங்கள் கொடுமைகள் அவர்களின் இலக்கிற்கு தடை வகுதலென்று பல்வேறு நெகிழ்வுகளை அவரது மனம் நெகிழ்ந்தே குறிப்பிட்டுள்ளார் .
பெண்கள் என்ற பெயருக்கு அர்த்தம் அறிந்தவர்உண்டோர் இங்கு ?அவர்கள் வெறும் காட்சி தரும் பொருளாகவே தெரியப்படுகிறார்களா சில ஆண்களுக்கு ? இன்னும் சில ஆண்கள் அவர்களது இல்லாள் 
மேல் தாக்குதல் நடத்தக்கூட தயங்குவதில்லை, ஒரு பெண்ணை அடிப்பதற்கான உரிமையை யார் அவர்களுக்கு வழங்கியது ? அவர்கள் உங்களுக்கு அமானிதம் என்று நீங்கள் அறியவில்லையா இதற்கெல்லாம் காரணம்தான் என்ன ? இன்று பல வீடுகளில் இதுதானே நடந்து கொண்டிருக்கிறது, பல ஆண்கள் இன்று தவறான பாதையில் போவதற்கான காரணம்தான் என்ன ......
இன்னும் பல இடங்களில் அவர்கள் இல்லாளை அடிமையாக நடத்தப்பட்டு வருகிறார்கள்,பெண் அமைதியானவள் என்பதற்காக அடிமைத்தனத்தை கையாளுகிறார்களா? ஆணுக்கு போல் பெண்ணிற்கும் சிந்தனைகளிலும் வீட்டு பொறுகளிலும் சட்ட உரிமைகளிலும் சம உரிமைகள் உள்ளது என்பதை பல ஆண்கள் அறியவில்லையா, காலம் காலமாக பேசப்படும் பெண் அடிமைத்தனத்தை அடியோடு அழித்திடவே இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறார் இல்லை பல பெண்களின் கண்ணீர்துளிமைகொண்டுசெதுக்கப்பட்டுள்ளார்... 
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners