இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் ஒருவர் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்க்கு பயன்படும் அம்சங்கள் ஆகும்.விடாமுயற்சி கொண்ட மனிதர் அவருடைய வாழ்வில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து இறுதியில் வெற்றியை காண்பர் என்பது உறுதி. ஒவ்வொரு மனிதரும் அவர்களின் சிந்தனையை முடிக்கிவிட்டு(Induce) செயல்பட்டால் வெற்றியை காண்பீர்கள் என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்து கூறுகிறார்.
ஆழ்மனதின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்.உங்களின் விருப்பங்களை ஆழ்மனதிடம் தொட்ர்ந்து கூறிவாருங்கள்.
உங்களின் நேரத்தை சரியாக பயன்படுத்தி உங்களின் தலைமை பண்புகளை கண்டுணரவும்.உங்களின் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் உற்று நோக்குங்கள்.
அவற்றில் பொதிந்திருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேற்றம் காணுங்கள்.
ஐம்புலன்களை கொண்டு நல்ல விஷயங்களை மனதிற்கு அனுப்புங்கள்.அவை உங்களின் வாழ்வை முடிவு செய்கிறது என உணருங்கள்.
அன்புடன்
ஆ.தியோடர் ராயன்
திருச்சி - 620014.
இந்த நூலின் ஆசிரியர் திரு.ஆ.தியோடர் ராயன்
அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
அவர் தந்தை பெயர் திரு.S.S.ஆரோக்கியசாமி, தாயார் பெயர் P.N.கமலம் ஆகும். இவர் தனது பள்ளிக்கல்வியை சொந்த கிராமத்திலும், பட்டப்படிப்பை திருச்சியிலும் நிறைவு செய்தார். தனது மேற்படிப்பை சென்னையில் முடித்தவுடன் அங்கேயே தன் பணியை துவங்கினார்.
அப்போது ஐக்கிய அமெரிக்க தேசத்திற்கு (USA) சென்று வேலை செய்து ஐந்தாண்டு பணியை முடித்து தாயகம் திரும்பினார்.
மீண்டும் பிரிட்டன் தேசம் சென்று மேலாண்மை கல்வி கற்றுக்கொண்டே பணி செய்தார்.அதன் பிறகு தாயகம் திரும்பினார்.
தனது அனுபவங்களையும்,நடைமுறை வாழ்க்கை சிந்தனைகளையும் இந்த நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.இந்த புத்தகம் அவர் எழுதிய முதல் புத்தகம் ஆகும்.