பால்யத்தில் வானம் ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கும். எல்லோரும் முழுநிலவை பார்த்தவாறு ஒரு கவளம் உணவையாவது விழுங்சி இருப்போம் அல்லவா? நமது முன்னோர்கள் கடவுள் வானத்தில் இருக்கிறார் என்று தானே சொல்லிக் கொடுத்துள்ளனர். இந்தப் பூமியில் நடப்பதற்கு சாட்சியாக வானம் தானே இருக்கிறது. பெளர்ணமி நிலவின் ஈர்ப்பு விசையால் தான் மன எழுச்சி அதிகரிக்கிறது இல்லையா? கிரகங்கள் மனிதர்களை பொம்மையாகத் தானே ஆட்டுவிக்கிறது. கலக்கத்தில் இருக்கும்போது வானத்தைப் பார்த்துக் கொள்வேன் பால்யத்தில் தெரிந்த ஏதாவதொன்று அகப்படுகிறதா என்று.
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ,உன்னதம், பதாகை ஆகிய இணைய இதழ்களிலும், படைப்பு, காற்றுவெளி ஆகிய மின்னிதழ்களிலும் நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது. மூன்றாவது கவிதை தொகுப்பு புள்ளிகள் நிறைந்த வானம் 2017ல் வெளிவந்தது. நான்காவதாக கட்டுரைகளும்,கவிதைகளுமாக துயர்மிகுவரிகள் 2017ல் வெளிவந்தது.இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. சிறுகதைகள்.காம்ல் இவரது சிறுகதைகள் படிக்கக் கிடைக்கும். தற்போது மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக வேலை செய்து வருகிறார்.